அமெரிக்கா அதிபர் இவரா? அதிபர் தேர்தல் விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை

அமெரிக்கா அதிபர் தேர்தல் தான் தற்போது உலகளவில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக உள்ளது.

 நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது,தற்போது வாக்கு எண்ணும் பனி நடைபெற்று வருகிறது.

 

குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்காவின் 45 வது மற்றும் தற்போதைய ஜனாதிபதி ஆன டொனால்ட் ஜான் டிரம்ப் மற்றும் ஜோசப் ராபினெட் பிடன் ஜூனியர், ஜனநாயக கட்சியினை சேர்ந்த இவர் 2009 முதல் 2017 வரை ஒபாமா நிர்வாகத்தில் அமெரிக்காவின் 47 வது துணைத் தலைவராக இருந்தவர்.இவர்கள் இருவருக்கு தான்  பலப்பரீட்சை நடந்து கொண்டிருக்கிறது.

வாக்காளர்களால் நேரடியாகத் தேர்வு  செய்யப்படுவதில்லை அமெரிக்கா அதிபர்கள்.மக்கள் அளிக்கும் வாக்குகளின் மூலம் வென்ற ஒரு மாகாணத்தில்  கட்சி, அந்த மாகாணத்துக்கான தேர்தல் சபை உறுப்பினர்களை நியமிக்கும். இந்தத் தேர்தல் சபை உறுப்பினர்களே அதிபரைத் தேர்வு செய்வார்கள்.அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ளன.அதில் உள்ள மக்கள் தொகையை பொறுத்து தேர்தல் சபை உறுப்பினர்கள் உள்ளனர்.

மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை உறுப்பினர்களில், 270 தேர்தல் சபை உறுப்பினர்களை கொண்டவரே அமெரிக்கா அதிபர் பதவிக்கு வர முடியும்.தேர்தல் முடிந்த பின் தேர்தல் அவை உறுப்பினர்கள் வாக்களித்து அமெரிக்க அதிபரை தேர்வு செய்வார்கள்.

நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் 264 வாக்குகளுடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். 6  தேர்தல் சபை உறுப்பினர்(எலக்டரல்) வாக்குகளே அவருக்கு தேவையாக உள்ளது.குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 214 வாக்குகள்  பெற்றுள்ளார்.இதுவரை வெளியாகி இருக்கும் முடிவுகளின் படி ஜோ பிடன் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.

 நார்த் கரோலினா, பென்சில்வேனியா போன்ற மாகாணங்களில் அதிக அளவில் தபால் வாக்குகள் பதிவாகி உள்ளது. இவை ஜனநாயக கட்சி மாகாணங்கள் ஆகும். இதன் காரணமாக பிடன் வெற்றிபெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,தனது ட்விட்டர் பக்கத்தில்,”தேர்தல் முடிவில் சதி செய்ய ஜனநாயக கட்சி திட்டம். இன்று இரவு அறிக்கை வெளியிட உள்ளேன்.. பெரிய வெற்றி கிடைக்கும்” என  ட்ரம்ப் செய்தி பகிர்ந்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் குழப்பதை ஏற்படுத்த டிரம்ப் முயற்சி செய்வதாகவும், தேர்தல் விதிகளுக்கு எதிராக பதிவிடுகிறார் என்றும் ட்ரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

 டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து உரையாற்றினார். நாம் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளோம். டெக்சாஸ், ஜார்ஜியா மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளோம். பென்சில்வேனியாவில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளோம் என்று தெரிவித்தார் டிரம்ப்.தேர்தல் முடிவுகளில் சிக்கல் ஏற்பட்டால் உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்றும் நீதிமன்றம் சென்று வாக்கு எண்ணிக்கையை நிறுத்தப்போவதாகவும் கூறினார் டிரம்ப். டொனால்ட் ட்ரம்ப் உச்சநீதிமன்றம் சென்றால் வழக்கை சந்திக்க தயார் என  ஜோ பிடன் தரப்பு  பதிலடி கொடுத்துள்ளது.

தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்கு தொடர முதலில் உச்சநீதிமன்றம் செல்ல முடியாது, மாநில நீதிமன்றங்களை நாட வேண்டும்.வழக்கு தொடரப்பட்டால் அமெரிக்காவின் அதிபர் யார் என்ற தேர்தல் முடிவுகள் வர நாட்கள் ஆகலாம்.

அதற்கு முன்னதாக இந்த நிச்சயமற்ற நிலையால் போராட்டம், மோதல் ஆகிய வடிவங்களில் கலவரங்கள் தோன்றலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

 தேர்தல் குறித்த தவறான தகவல்களை பதிவிடக்கூடாது என ட்விட்டர், பேஸ்புக் எச்சரிக்கை செய்துள்ளது இருகட்சியினருக்கும். தேர்தலில் தாம் வென்று விட்டதாக டிரம்ப் கூறிய பின்பு, வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன, வெற்றியாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை என்று ‘நோட்டிஃபிகேஷன்’ வழியாக  ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் வெளியிட்டது.

அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் டிரம்ப் ஆதரவாளர்கள் தொடர் பேரணி சென்றனர்.அவர்கள் தபால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.வாக்கு மையம் முன் பேரணியால் மக்கள் கூடியதால் பென்சில்வேனியா, ஜார்ஜியாவில்  பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட திருநங்கை சாரா மெக்ட்ரைட்  எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இது அமெரிக்கா வரலாற்றில் முதல்முறை ஆகும்.

பெருந்தொற்று பாதிப்புக்கு மத்தியில்,அமெரிக்க வரலாற்றில் அதிபர் தேர்தலில் 120 ஆண்டுகளில் இதுவரை இல்லாத வகையில், இந்த முறை அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது.28 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியை பயன்படுத்தி, தேர்தலுக்கு முன்பே 9 கோடியே 40 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். 66.9 சதவீதம் பேர் இந்த தேர்தலில் வாக்களித்துள்ளதாக புள்ளி விவரம் சொல்கிறது. தபால் வாக்குகளும் இந்த முறை அதிக அளவில் வந்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 வெள்ளை மாளிகையின் அடுத்த அதிபர் யார் என அறிந்து கொள்ள உலகமே காத்திருக்கும் வேளையில் நாமும் காத்திருப்போம் . ஆனால் இதுவரை வெளியாகி இருக்கும் முடிவுகளின் படி ஜோ பிடன் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.

One thought on “அமெரிக்கா அதிபர் இவரா? அதிபர் தேர்தல் விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *