அனுனாகி மர்மம் என்ன? மனித இனம் உருவானது இவர்களால் தானா?

6,000 ஆண்டுகளுக்கு முன்னர், உலகின் முதல் நாகரிகமான சுமேரியர்கள் மனிதகுலத்தை உருவாக்க வானத்திலிருந்து வந்ததாக நம்பப்படும்  வான கடவுள்கள் தான் அனுநாகி என்று அழைக்கப்படும் இந்த கடவுளர்கள் ஆவர்.

மெசொப்பொத்தேமியாவில் அமைந்திருக்கும் பண்டைய சுமர் நகர-மாநிலங்களின் தொகுப்பாகும். சுமேரியர்கள் மேம்பட்ட போராளிகள், கணிதம் மற்றும் எழுத்து ஆகியவற்றைக் கொண்டிருந்தனர். அவர்களின் பல எழுத்துக்கள் நவீன மக்களுக்கு சுமேரிய கலாச்சாரத்தைப் பற்றி சொல்கின்றன.

சுமேரிய நாகரிகம் 4100 B.C.E. சுமார் 1750 வரை B.C.ஏ வரை இருந்துள்ளது. “சுமர்” என்ற பெயர் “நாகரிக மன்னர்களின் நிலம்” என்று பொருள்படும். நேரத்தை மணிநேரமாகவும் நிமிடங்களாகவும் பிரித்த முதல் குழுக்களில் சுமேரியர்களும் ஒருவர்.

சுமேரியர்களின் கல்வெட்டுகளில்  ஒன்பது கோள்களை வரைந்து வைத்து உள்ளனர்,சிற்பமாக செதுக்கி வைத்திருக்கிறார்கள் .பூமியில்  கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாக இருந்து  கண்டுபிடிக்கப்பட்ட நிறைய தங்கச் சுரங்கங்கள் இருந்தன. தங்கம் எப்பொழுதும் மதிப்பு மிக்க பொருளாகவே உள்ளது, இந்த தங்கத்தை எடுப்பதற்காக தான் ஒரு அனுநாகி இந்த பூமிக்கு வந்தார்களா என்ற கேள்வியும் உள்ளது .

தெற்கு பெருவில் உள்ள நாஸ்கா கோடுகள், அவை பாலைவன மணல்களில் பதிக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 1,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், விலங்குகள் மற்றும் தாவரங்கள் உட்பட சுமார் 300 வெவ்வேறு புள்ளிவிவரங்கள் உள்ளன. 10,000 க்கும் மேற்பட்ட வரிகளைக் கொண்டது, அவற்றில் சில 30 மீட்டர் அகலமும் 9 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளமும் கொண்டவை.இதனை வரைந்தது அனுநாகி இனத்தவரா என்கின்ற சந்தேம் உள்ளது.

ஜெகாரியா சிட்சின்  பூமியின் தோற்றம் மற்றும் மனித-வகையான வான வம்சாவளி பற்றிய கோட்பாடுகளுக்கு மிகவும் பிரபலமானவர்.1976 ல் காரியா சிட்சின்  பூமியின் தோற்றம் மற்றும் மனித-வகையான வான வம்சாவளி பற்றிய கோட்பாடுகளுக்கு மிகவும் பிரபலமானவர்.1976 ல்  பண்டைய சுமேரிய கலாச்சாரத்தை உருவாக்கியது அனுநாகி என்றும், இவர்கள்  நெபுட்டூனுக்கு அப்பால் உள்ள ஒரு கிரகத்தில் இருந்து நிபிரு என்று அழைக்கப்படும் வேற்று கிரகங்களின் இனம் என்று அவர் கூறினார். நிபீரு கிரகம் சூரியனைச் சுற்றி 3,600 ஆண்டுகள் நீளமுள்ள நீள்வட்ட சுற்றுப்பாதையில் இருப்பதாக சுமேரிய புராணங்கள் தெரிவிக்கின்றன என்று அவர் வலியுறுத்தினார்.அவ்வாறு அவை பூமிக்கு அருகில் வரும்போது அதில் இருந்து வந்தவர்கள் தான் அனுநாகி என்ற இனத்தவர்.அவர்கள் பூமியில் உள்ள தங்கத்தை அடைய வந்தவர்கள் என்றார்.  ஆனால்  சிட்சினின் கருத்துக்களை விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்கள் நிராகரித்தனர்.

சுமேரியன் என்பது தற்போது உள்ள ஈரான், ஈராக் உள்ள இடம் ஆகும்.இவ்விடங்களில் மக்கள் முதன்முதலில் அதிகமாக வாழ தொடங்கினர்.சக்கரம், கலப்பை மற்றும் எழுதுதல் இவைகள் எல்லாம் அவர்களின் கண்டுபிடிப்பே. சுமேரில் உள்ள விவசாயிகள் தங்கள் வயல்களில் இருந்து வெள்ளத்தைத் தடுத்து நிறுத்துவதற்கும், ஆற்றின் நீரை வயல்களுக்கு அனுப்ப கால்வாய்களை வெட்டுவதற்கும் வழிவகைகளை உருவாக்கினர். நீர்ப்பாசனத்தை உருவாக்கி விவசாயத்தை அறிய வைத்ததும் சுமேரியர்கள் தான்.

இவர்களின் அனைத்து கண்டுபிடிப்பையும் ஏற்று கொண்டவர்கள் அவர்கள் எப்படி மனிதர்கள் ஆனார்கள் என்று எழுதி வைத்ததை மட்டும் ஏற்று கொள்ளவில்லை.

தங்களை மனிதர்களாக மாற்றியது யார் என்று எழுதி வைத்துள்ளனர்.அவர்கள் எழுதி உள்ளது யாதெனில் நிபீரு என்னும் கிரகம் 3600 வருடங்களுக்கு ஒருமுறை நமது பூமிக்கு அருகில் வரும்.அப்படி ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர் அக்கிரகம் பூமிக்கு அருகில் வரும்போது அதிலிருந்து ஏழு பேர் கொண்ட குழு பூமிக்கு வந்தது என்றும் அவர்கள் முழுமையாக மனிதர்களை போலில்லாமல் வேறு வேறு உருவங்களை கொண்டிருந்தனர்.  .அவரகள் தான் அனுநாகி என்கின்றனர்.இந்த ஏழு பேரில் நான்கு நபர்களின்  உருவங்கள் நமக்கு கிடைத்துள்ளன மீதி மூன்று பேரின் அடையாளம் காலத்தின் மாற்றத்தால் மறைந்து விட்டன.

இவர்களே ஏலியன்ஸ் என்கின்றனர்.பூமியில் இருந்து வராமல் வேறு கிரகத்தில் இருந்து வந்தவர்களே ஏலியன்ஸ் என்பர்.அவர்கள் பூமிக்கு வரும் போது இருந்த மனிதர்கள், மனிதர்களை போல் அல்லாமல் ஒரு விலங்கின் வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருந்தனர்.தனக்கென ஒரு மொழி இல்லாமல், வேட்டையாடி தனது உணவினை உண்டு இலக்கில்லாமல் இருந்தனர்.

வந்த அனுநாகியர்கள் பூமி, சூரியன் அருகில் இருப்பதால் கதிர்வீச்சு அதிகமாக இருப்பதை உணர்க்கின்றனர்.அதனால் அவர்கள் பூமியில் கிடைக்கும் தங்கத்தை வைத்து  ஓசோன் படலத்தை உருவாக்குகின்றனர்.தங்கம் சூரியனின் தாக்கத்தை குறைக்கும் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு கேள்வி 5000 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுக்கு எப்படி தெரிந்தது என்பது தான்.விண்ணில் அனுப்பும் விண்கலத்திற்கு எல்லாம் தங்கமுலாம் பூசியே அனுப்பப்படுகிது, சூரியனின் தாக்கத்தை தாங்கிக் கொள்வதற்கு. சூரியனின் தாக்கம் அதிகம் உள்ளதால் பூமியில் இருக்கும் மக்கள் அடர்ந்த கட்டுப்பகுதியிலே வாழ்கின்றனர்.கதிர்வீச்சு குறைந்ததினால் அனுநாகி, மனிதர்களை முதலில் வனப்பகுதியில் இருந்து வெளிக்கொண்டு வருகிறார்கள்.அவர்கள் பேசிய மொழி சுமேரிய மொழி  என்று எழுதி வைத்து உள்ளனர்.அதில் வரும் வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளை ஒத்துள்ளது.

சுமேரிய மொழி பேசி அனுநாகி மனிதர்களை வேலை வாங்க முற்படுகின்றனர்.ஆனால் வேலை செய்து பழக்கம் இல்லாத மனிதர்கள் செய்ய மறுக்கின்றனர்.அதனால் அனுநாகி தன்னிடம் உள்ள மரபணுக்களை எடுத்து மனிதர்களின் மரபணுக்களுடன் இணைத்து மனிதர்களை முழுமைடைய செய்கின்றனர். இவ்வாறு அவர்களை மாற்றி அவர்களிடம் வேலை வாங்கி பூமியில் உள்ள தங்கத்தை எடுக்க முற்படுகின்றனர்.தங்களுடைய சாம்ராஜ்யத்தை உருவாக்கவும் மனிதர்களை பயன்படுத்தினர்.மனிதர்களை முழுமை அடைய செய்ததனால் இவர்கள் அனுநாகி யை கடவுளாக பார்க்க தொடங்கினர் .

அனுநாகி மற்றும் மனிதர்கள் எண்ணிக்கையில் அதிகம் ஆகின்றனர்.மனிதர்கள் அவர்களின் அடிமைகளாக வாழ்கின்றனர்.ஆறறிவு மக்களாக மாறிய பின்னர் மனிதர்கள் அனுநாகி இனத்தவரை எதிர்க்க துணிகின்றனர்.அனுநாகி இனத்தவரோடு தொடர்பு கொண்டு குழந்தைகளை பெறுகின்றனர்.இவ்வாறு பல வகையான மனித இனம் தோன்றி உலகத்தின் உள்ள அனைத்து இடங்களிலும் பரவியதாக எழுதி உள்ளனர்.

பெரும் தலைவர்கள் தோன்றி அவர்களை எதிர்க்கின்றனர்.மனிதர்கள் தனக்கு மேல் வளர விரும்பாத அனுநாகி பூமியை விட்டு வெளியேற முடிவு செய்கின்றனர்.3600 வருடங்களுக்கு பிறகு திரும்ப வரும் நிபிரு கிரகத்திற்கு செல்ல முடிவு செய்கின்றனர்.அனுநாகி, மன்னர்களை சந்தித்து அவர்களுக்கு மன்னர் இணைத்து மரபணுக்களை தருவதாகவும், அவர்களே மனிதர்களை ஆளவும் வழிவகை செய்தனர்.மன்னர்கள் மக்களுடன் இணைய கூடாது என்று கூறி, தங்களால் நியமிக்கப்பட்ட மன்னர்களிடம் பூமியை ஒப்படைத்து அவர்கள் நிபிரு கிரகம் சென்றனர்.இவ்வாறாக மனித இனம், மொழி தோன்றியதாக சுமேரிய இனத்தவர் எழுதி வைத்து சென்றுள்ளனர்.

அனுநாகி சுமேரியன் இனத்தவர் பாம்பாக பார்த்தனர்.ஹிந்து கோவில்களில் நாகம் இல்லாத கோவில்களை நம்மால் பார்க்க இயலாது.அது போல பெரிய ஆலயங்களில் உள்ள கடவுளின் பின்னால் ஏழு தலை உள்ள நாகம் இருப்பதை நாம் பார்த்திருப்போம். அவை இந்த அனுநாகியை குறிப்பதா என்ற கேள்வியும் உண்டு.அதே போல் கோவில்களில் இருக்கும் இரண்டு பாம்பு ஒன்றோடு ஒன்று இணைத்து இருப்பது அனுநாகி செய்த மரபணு மாற்றத்தை குறிக்கின்றதா என்ற கேள்வியும் உண்டு.

அனுநாகி மனிதர்களை போன்று சில விலங்குகளையும் உருவாக்கியதாக எழுதி உள்ளனர்.அவர்களின் கூற்றுப்படி அந்த விலங்கு உருவத்தில் மிகப்பெரியதாக யானையை போலவும் முகம் சிங்கத்தை போலவும் இருந்ததாக கூறுகின்றனர்.இது போன்ற உருவம் நமது வரலாற்றில் உள்ள யாளியை நினைவுபடுத்துகிறது.சுமேரிய கலச்சாரத்திற்கும் தமிழ் கலாச்சாரத்திற்கும் சில ஒற்றுமைகள் உள்ளன.

அனுநாகி என்பவர்கள் கடவுளா இல்லை வேற்றுகிரகவாசிகளா என்பது இன்னும் கேள்வியாகவே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *