கட்டாயம் படிக்க வேண்டிய மிகச் சிறந்த பத்து புத்தகங்கள்

பொன்னியின் செல்வன் 

தமிழில் எழுதப்பட்ட கல்கி கிருஷ்ணமூர்த்தியின் வரலாற்று நாவல். இதற்கான தகவல்களை சேகரிக்க கல்கி மூன்று முறை இலங்கை சென்றார்.இந்நாவலை முடிக்க மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியது.1950 ல் வெளியிடப்பட்ட இந்நாவல் 2200 பக்கங்களுக்கு மேல் கொண்டது.கல்கி என்ற தமிழ் மொழி இதழில் 1950 களில் தொடராக வெளியிடப்பட்டது, பின்னர் நாவலாக வெளியிடப்பட்டது.பொன்னியின் செல்வன் நாவலுக்கான ரசிகர்கள் மிகவும் அதிகம்.இன்றளவும் ரசிகர்கள் இருப்பது ஆசிரியர் கல்கியின் எழுத்தாற்றலை பறைசாற்றுகிறது.கல்கி அவர்கள் இந்த புதினத்தை புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களாகப்,மொத்தமாக 300க்கு மேற்பட்ட அத்தியாயமாக உருவாக்கியுள்ளார்.

கி.பி.1000-ஆம் ஆண்டில்  வாழ்ந்த சோழ பேரரசர் சுந்தர சோழர் மரணப்படுக்கையில் இருக்கிறார் அவருடன் அவருடைய மூத்த மகள் குந்தவை இருக்கிறார் மூத்தமகன் ஆதித்த கரிகாலன் காஞ்சியில் இருக்கிறார், இளைய மகன் அருண்மொழி தேவன் இலங்கையில் இருக்கிறார். பான்டிய மன்னரை கொன்றதற்காக ஒரு கும்பல் கரிகாலனை கொல்ல திட்டம்  தீட்டுகிறது.கரிகாலன் பிழைத்தாரா? இதனிடையே சிற்றசர்கள் ஆட்சியை கைப்பற்ற முயல்கிறார்கள்.ஆட்சி பீடம் யாருக்கு என்பதே கதை ஆகும்.

பார்த்திபன் கனவு

கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கல்கி இதழில் தொடராக வெளியான வரலாற்றுப் புதினம் பார்த்திபன் கனவு.. இது பின்னர் நூலாக வெளிவந்தது.

பார்த்திபன் எனும் சோழ அரசனின் கனவு அவரின் புத்திரன் விக்ரமன்  மூலம் எவ்வாறு நிறைவேறுகின்றது என்பதே பார்த்திபன் கனவு நாவல் ஆகும்.பல்லவ அரசின் கீழ் அடிமைகளாக இருக்கின்றனர் சோழர்கள்.சோழ அரசனாக வரும் பார்த்திபன்,சோழ அரசின் பெருமையை மீட்கும் பொருட்டு பல்லவர்களுக்கு   கப்பம் கட்டாமல் அவர்களை போருக்கு அழைக்கிறான்.ஆனால் போரில் தோற்கிறான்.இறப்பதற்கு முன் போர்க்களத்தில் வரும் சிவனடியாரிடம் ஒரு சுதந்திர நாட்டுக்கு அவரது மகனை அரசனாக்கி சோழர் மணிமகுடத்தை பெருமை சேர்க்க சொல்லி உறுதி வாங்கி இறக்கிறார்.விக்ரமன் பார்த்திபனின் கனவை நிறைவேற்றுவதற்காக பல்லவ மன்னன் நரசிம்மவர்மனுக்கு பதிலடி கொடுக்க திட்டமிடுகிறார், ஆனால் அவரது மாமா மரப்ப பூபதி அவரைக் காட்டிக் கொடுக்கிறார், விக்ரமன் நரசிம்மவர்மனால் கைது செய்யப்பட்டு தொலைதூர தீவுக்கு நாடு கடத்தப்படுகிறார்.நரசிம்ம பல்லவரின் புதல்வி குந்தவி விக்ரமன் மீது காதல் கொள்கிறாள்.விக்ரமனின் தாயை நரபலி கொடுக்க கடத்தப்படுகிறார்,இவர்கள் என ஆனார்கள்?பார்த்திபன் கனவை நிறைவேற்றினாரா? என்ற கேள்விகளுக்கு விடையே பார்த்திபன் கனவு.

சிவகாமியின் சபதம்

கல்கி எழுதிய வரலாற்று நாவல் சிவகாமியின் சபதம்.1946 ஆம் ஆண்டில் கல்கி இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.பின்னர் 1948 ல் நாவலாக வெளியிடப்பட்டது.7 ஆம் நூற்றண்டில் தென்னிந்தியாவில் நடந்த வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பே சிவகாமியின் சபதம்.4 பாகங்கள் உள்ள இப்புத்தகத்தில் சுமார் 1056 பக்கங்கள் உள்ளன.பல்லவர்கள் சிற்பக்கலைக்கு கொடுத்த முக்கியத்துவம்,நடன கலை,கல்வி,மதம்,காதல்  பற்றி விளக்கியுள்ளது இந்நாவல்.

 பல்லவ மன்னன் மகேந்திர பல்லவனின் காஞ்சி கோட்டையை கைப்பற்ற வாதாபி மன்னன் புலிகேசி படையெடுத்து வருகிறான்.புலிகேசியின் அண்ணன் நாகநந்தி ஒற்றனாக காஞ்சி நகரில் இருக்கிறான்.படை எடுக்கும் நேரத்தை பரஞ்சோதி என்பவனிடம் ஓலையில் குறித்து அனுப்புகிறான்.மகேந்திர பல்லவன் நாகநந்தியின் ஓலையை மாற்றி வைத்து விடுகிறார். புலிகேசியிடம் மாட்டிக் கொண்ட பரஞ்சோதியை மீட்டு அவரை பல்லவ படையின் தளபதி ஆக்குகிறான்.புலிகேசியின் படை உள்ளே வராமல் தடுக்கின்றனர்.மகேந்திர பல்லவனின் மகன் மாமல்லன் நாட்டியகலையில் சிறந்து விளங்கும் சிவகாமி என்னும் ஆயனரின் மகளுடன் காதல் கொள்கிறான்.மகேந்திர பல்லவனுக்கும் மாமல்லன் சிவகாமியை மணந்துகொள்ளவதில் விருப்பம் இல்லை.காஞ்சி கோட்டையை அடைய முடியாமல் சமாதான தூதின் மூலம் விருந்தினராக காஞ்சியில் தங்குகிறான் புலிகேசி.நாகநந்தியை சிறையில் இருந்து விடுதலை செய்யாததால் போகும் வழி எல்லாம் அழித்து விட்டு செல்கிறான்.சிவகாமியை ஏமாற்றி அழைத்து செல்கிறான் நாகநந்தி வாதாபிக்கு . “புலிகேசியை வென்று வாதாபியியை எரித்து என்னை அழைத்து செல்லுங்கள் என்று சபதம் செய்கிறாள்” சிவகாமி.மாமல்லன் சிவகாமியின் சபதத்தை நிறைவேற்றினாரா,அவர்கள் காதல் ஜெயித்ததா என்பதே மீதி கதை.

கடல் புறா

சாண்டிலியன் எழுதிய சரித்திர நாவல் கடல் புறா.கதைக்களம் பண்டைய வீரராஜேந்திர சோழர் காலத்தில் கடல் வாணிபத்தில் ஏற்பட்ட பிரச்னையை மையமாக வைத்து எழுதப்பட்டது.1967 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.3 பாகங்களை கொண்ட நூல் இது.எட்டு மாத ஆராய்ச்சியின் பின்னரே எழுதப்பட்டது என்று சாண்டில்யனே முகவுரையில் கூறுகிறார்.

 சோழ மன்னன் கொடுத்தனுப்பிய சமாதான ஓலையுடன் கலிங்கத்து பாலூர்ப் பெருந்துறைக்கு வந்து சேரும் கருணாகரன், தன்னுடைய தோழன் வேங்கி நாட்டு இளவரசன் அநபாய சோழன் (பிற்கால குலோத்துங்க சோழ மன்னன்) சிறை பிடிக்கப்பட்ட செய்தியைக் கேட்டு சினம் கொண்டு சண்டையில் இறங்கும் அவனை காவலர்கள் துரத்த , மளிகை ஒன்றில் பதுங்குகிறான்.தான் தேடி வந்த கடாரத்து இளவரசனுடைய மகளது அரண்மனையில் இருப்பதை அறிகிறான்.  கருணாகரனால் தனது நண்பனை சிறையில் இருந்து காப்பாற்ற முடிந்ததா? கடாரத்து இளவரசனையும் அவரது மகளையும் கலிங்கத்தில் இருந்து சோழ நாட்டுக்கு பத்திரமாகக் கொண்டு செல்ல முடிந்ததா?  கருணாகரனை தீர்த்துக்கட்டும் முடிவோடு இருக்கும் கலிங்கத்து மன்னன் பீமனையும் அவனது படைகளையும் சமாளிக்க முடிந்ததா?. இரண்டாம் பாகம், கருணாகரன் கலிங்கத்தில் இருந்து அகூதாவின் உதவியோடு தப்பி அவனிடம் கடல்போர் முறைகளை பயின்ற பின்னர் நடக்குமாறு அமைக்கப்பட்டிருக்கிறது.கலிங்கத்தில் தப்பிய ஒரு வருடத்திற்கு பிறகு அக்ஷயமுனைக்கு வரும் கருணாகரன் கடல்தளம் ஆரம்பித்து கலிங்கத்து கடற்தளத்தை ஒடுக்க நினைக்கிறன்.அங்கு அவன் சந்திக்கும் இன்னல்கள், காதல் பற்றி சொல்வதே இரண்டாம் பாகம். அக்ஷயமுனையை விட்டுக் கிளம்பும் இளையபல்லவன் மாநக்காவரத் தீவுகளை நோக்கி அங்கே கடற்தளம் அமைக்கும் எண்ணத்தில் சென்று, அங்கேயும் பிரச்சனைகளை சந்தித்து, கடற்தளம் அமைத்து கலிங்கத்தின் கடல்பலத்தை ஒடுக்குவது குறித்தும், ஸ்ரீவிஜயத்தின் மீதான போர் குறித்தும் விளக்குவது  மூன்றாம் பாகம்.

என் இனிய இயந்திரா

என் இனியா இயந்திரா எழுத்தாளர் சுஜாதாவின் எழுதிய அறிவியல் புனைகதை நாவல் ஆகும். 1980 களில் இந்த நாவலை பிரபல தமிழ் இதழான ஆனந்த விகடனில் ஒரு தொடராக எழுதினார் சுஜாதா.இதன் வெற்றியை தொடர்ந்து “மீண்டும் ஜீனோ” என்ற தொடர் நாவல் எழுதினார்.தூர்தர்ஷனில் 1991 ஆம் ஆண்டு இந்நாவல் சீரியலாக ஒளிபரப்பப்பட்டது.

கி.பி. 2022  ல் இந்தியாவில் நடக்கும் கதை என 1980 களில் எழுதப்பட்டது.சுஜாதாவின் கற்பனைகளுக்கு அளவில்லை என்பதற்கு இந்நாவல் ஓர் சாட்சி. ஜீவா என்னும் சர்வாதிகாரியின்  கீழ் உள்ளது நாடு.தன்னிச்சையாக எதுவும் செய்யமுடியாத நாட்டில். பிறப்பு, இறப்பில் கூட அரசாங்கத்தின் தலையீடு உண்டு.மக்கள் அனைவர்க்கும் ஓர் நம்பர் உண்டு பெயருக்கு பதிலாக நம்பரை தான் பயன்படுத்த வேண்டும். சிபி,நிலா என்ற தம்பதியினர்.இதில் சிபி காணாமல் போகிறான்.இநேரத்தில் நிலா வீட்டிற்கு வரும் ரவி, அவனின் ரோபோட் நாய் ஜீனோ.ரவி அரசாங்கத்துக்கு எதிரானவன்.அவனுடன் சேர்ந்து ஜீவாவை கொல்ல முற்சிக்கிறாள் நிலா.நிலா அவள் கணவன் சிபியை கண்டுபிடித்தாளா? உண்மையில் ஜீவா யார்? ஜீனோ விடம் ஏற்படும் மாற்றம் என கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார் கதாசிரியர்.

நைலான் கயிறு

சுஜாதா அவர்களின் முதல் நாவல் என்ற பெருமையை பெறுகிறது நைலான் கயிறு. 1960 களில் குமுதத்தில் தொடர்கதையாக 14 வாரங்கள் வெளி வந்தது. துப்பறியும் கதை,கணேஷ் கேரக்டர் முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட நாவல்.

அடுக்குமாடிக் கட்டடத்தில் நைலான் கயிறு மூலம் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார் கிருஷ்ணன். சந்தேகத்தின் பேரில் தேவ் மற்றும் ஹரிணியை கைது செய்கிறார்கள்.கணேஷ் அவர்கள் வழக்கை சரியான சாட்சிகள் இல்லை என விடுதலை வாங்கி தருகிறான்.ஓய்வு பெறப் போகும் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் இந்தக் கொலை வழக்கை விசாரிக்க முன்வருகிறார். அவர் கொலையாளியை கண்டுபிடித்தாரா? கொலையாளிக்கு தண்டனை வாங்கி தந்தாரா என்பதே நைலான் கயிறு கதை ஆகும்.

வெக்கை

பூமணி என்னும் எழுத்தாளரால் எழுதப்பட்ட நாவல் வெக்கை.ஒரு உண்மையான நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது இந்நாவல்.பதினைந்து வயதில் பலி வாங்கும் சிறுவன், அவனின் குடும்பம்,அவர்களின் அன்பு,பாசம் பற்றியது கதை.தனுஷ் நடிப்பில் வெளியான வெற்றிமாறனின் படம் அசுரன் இந்நாவலின் தழுவலே ஆகும்.

பதினைந்து வயது சிறுவன் சிதம்பரம்,தன் அண்ணனை கொன்றவனை கொலை செய்வதில் ஆரம்பிக்கிறது கதை.சிதம்பரத்தின் அப்பா ஒரு ஃபாக்டரியில் வேலை செய்கிறார். ஃபாக்டரி முதலாளியின் நண்பர் வடகூரான் அந்த கிராமத்திலுள்ள எல்லா நிலங்களையும் தனதாக்கி கொள்ள பார்க்கிறான்.அவன் பார்வையில் சிதம்பரத்தின் நிலமும் விழுகிறது.நில பிரச்சனையால் சிதம்பரத்தின் அண்ணன் கொலை செய்யப்படுகிறான்.இதனால் சிதம்பரம் அண்ணனை கொன்ற வடக்கூரானை கொலை செய்து,குண்டு வீசி தப்பி செல்கிறான்.தனது தந்தையுடன் தப்பி செல்லும் சிதம்பரம் ஒளிந்து வாழும் இடம்,கிடைத்ததை சமைத்து சாப்பிடுவது,அவர்களது உரையாடல் என செல்கிறது கதை.தலைமறைவு வாழ்க்கை போதும் நீதிமன்றத்தில் சரணடைய செல்வதோடு முடிகிறது நாவல்.

விவேக்,விஷ்ணு,ஒரு விடுகதை

விவேக்,விஷ்ணு,ஒரு விடுகதை கதையை எழுதியவர் எழுத்தாளர் ராஜேஷ் குமார்.இவர் துப்பறியும் மற்றும் திரில்லர் புத்தகங்களுக்கு பெயர் பெற்றவர்.விவேக்,விஷ்ணு என வரும் இரண்டு கதாபாத்திரங்கள் இவரது புத்தகத்திற்கு மெருகு சேர்கின்றன.இக்கதையிலும் இவர்களே ஹீரோக்கள்.

டி.ஐ.ஜி பால்ராஜ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி ரவீந்தர், இருவரும் பாம்பு கடியால் இறக்கின்றனர்.ஆனால் அவரின் போஸ்ட்மார்ட்டம் அறிக்கை அவர் இறப்பதற்கு முன்பே வந்ததாக அவர் மனைவி கூறுகிறார்.இதனால் கேஸ் குழப்பமடைகிறது.விவேக் கையில் செல்கிறது கேஸ்.அவர் தந்து விறுவிறு பணியில் கையாள்கிறார் இதனை.இறந்த பால்ராஜின் நம்பரில் இருந்து விவேக்கிற்கு எஸ்.எம்.எஸ் வருகிறது.அதனை வைத்து கொலையாளியை நெருக்கிறார் விவேக்.கொலையாளி யார் என்று கண்டுபிடித்தாரா? கொலைக்கான காரணம் என என்று கண்டுபிடிப்பதே கதை ஆகும்.

கள்ளிக்காட்டு இதிகாசம்

வைரமுத்து எழுதிய நாவல் கள்ளிக்காட்டு இதிகாசம்.கிராம விவசாயிகளின் வாழ்க்கையை சித்தரிக்கும் நாவல் கள்ளிக்காட்டு இதிகாசம் . கவியரசு வைரமுத்துவின் ஆரம்ப  கால வாழ்க்கையினை கூறும் உண்மை கதை.வைகை அணை கட்டப்பட்ட பொது காலி செய்யப்பட்ட கிராமங்களின் கதை,கள்ளிப்பட்டி என்னும் ஊரை சுற்றியுள்ள மக்கள், அவர்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் பற்றி சொல்கிறது.நாவல் 23 மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் என சாகித்ய அகாடமி கூறியுள்ளது. ஹிந்தி மொழிபெயர்ப்பு வெளியாகிவிட்டது.

70 வயது ‘பேயத்தேவர்’  இவரின் உணர்வு போராட்டமே கள்ளிக்காட்டு இதிகாசம். கள்ளிக்காட்டில் வாழும் விவசாயி. இவரது வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை விவரித்திருக்கிறது.அவருடன் நாமும் பயணிப்பது போன்று அனுபவம் தருகிறது இந்நூல்.நீர் பற்றாக்குறை,சாதி முறை, காதல், உழைப்பு,சோகம், என கலவையாக செல்கிறது கதை.இக்கதையை படித்தவர்களுக்கு வைகை அணையை பார்த்தால் பேயத்தேவர் நியாபகம் வராமல் போகாது.கதையின் முடிவு நெஞ்சங்களை கணக்க செய்கிறது.

ரகசியமாக ஒரு ரகசியம்

இந்திரா சௌந்தராஜாஜனின் நாவல் ரகசியமாய் ஒரு ரகசியம்.இவரது கதைகள் ஆன்மீகம்,மறுபிறவி,ஆவிகள் போன்றவற்றை சிறப்பாக கையாளும்.பெரும்பாலும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டவை.இவரது கதைகள் தொலைக்காட்சி தொடராகவும் ஒளிபரப்பப்பட்டுள்ளது .

 சித்தர்பட்டி எனும் மலைக்கிராமத்தில் உள்ள சித்தேஸ்வரர் ஆலயம் பிரசித்தி பெற்றதாக உள்ளது. கோவிலில் உள்ள சுனை நீரில் தீராத நோய்களும் குணமாகின.அக்கோவிலின் மரபுகளை மீறுபவர்களை இறைவன் தண்டிப்பான் என்ற நம்பிக்கையும் உள்ளது.தண்டனை மரணமாகவும் இருக்கும்.இதனை செய்வது சித்தர்கள் என்று சிலரும் , மர்ம மனிதன் என்று சிலரும் நம்பினார்.இம்மர்மங்களை கண்டுபிடிக்க முயன்று மரணம் சம்பவித்தனரும் உண்டு.இதன் பின்னணியில் இருப்பது சாமியா அல்லது  அசாமியா? சுனை நீரில் குணமாகும் மர்மம் என்ன? போன்ற கேள்விகளுக்கு விடையே ரகசியமாய் ஒரு ரகசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *