ப்ளூ மூன் எப்படி ஏற்படுகிறது? அடுத்த ப்ளூ மூன் எப்போது?

ப்ளூ மூன் என்பது ஒரே மாதத்தில் இரண்டு முறை முழு நிலவு தென்பட்டால், அதில் இரண்டாவதாக வரும் முழு நிலவிற்கு ப்ளூ மூன் (Blue Moon) என்று பெயர். இது ஒரு நீல நிலவு என்று அழைக்கப்பட்டாலும், சந்திரன் உண்மையில் நீல நிறமாகத் தெரியவில்லை. “இயற்கை பேரழிவுகளால் வளிமண்டலத்தில் வீசப்படும் துகள்கள் காரணமாக” சந்திரன் மிகவும் அரிதாகவே நீல நிறமாகத் தெரிகிறது என்று நாசா கூறுகிறது.

மாதம் ஒரு முறை பௌர்ணமியும், அமாவாசையும் வருவது வழக்கம்.29 நாட்களுக்கு ஒரு முறை வரும் பவுர்ணமி, மாதத்தில் 30 அல்லது 31 நாட்கள் இருப்பதால், சராசரியாக 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரே மாத்தில் இரண்டு பவுர்ணமிகள் வந்துவிடுகிறது.அறிய நிகழ்வாக  நிகழும்  இந்த நிகழ்வு  அக்டோபர் 31  2020ல் நடந்துள்ளது.  கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முழு நிலவு தென்பட்டது,அது “அறுவடை நிலவு” என்று அழைக்கப்படும். அதன்பிறகு அக்டோபர் 31 முழு நிலவு வானில் தெரிந்தது இது ப்ளூ மூன் ஆகும்.

இந்த ப்ளூ மூன் ஹாலோவீன் நிகழ்வின் போது தோன்றி இருப்பதை மக்கள் சிறப்பு நிகழ்வாக பார்க்கின்றனர்.இதற்கு முன் ஹாலோவீனில் ப்ளூ மூன் தென்பட்டது 1944 ஆம் ஆண்டு.அடுத்த ஹாலோவீன் ப்ளூ மூன் 2039 ல் நிகழும் என நாசா கூறியுள்ளது.

வருடந்தோறும் அக்டோபர் 31 ஆம் நாள் ஹாலோவீன் நாளாக மேற்கத்திய நாடுகளில் பேய்களுக்காக கொண்டாடப்படுகிறது.வெயில் காலம் முடிந்து குளிர் காலத்தின் ஆரம்பமாகவும் பார்க்கப்படுகிறது.வெவ்வேறு முறைகளில் இதனை அனைவரும் கொண்டாடுகின்றனர்.இந்தியா வில் இது கொண்டாடப்படுவதில்லை, ஆனால் சில ஆண்டுகளாக ஒரு சிலர் இதனை கொண்டாடி வருகின்றனர்.இந்த ஹாலோவீன் தினத்தில் தோன்றுவதால் ப்ளூ மூன் இன்னும் சிறப்பான பேசுபொருளாக உள்ளது.

19 வருடங்களில் 7 முறை தோன்றுகிறது ப்ளூ மூன்.2020 உண்மையில் வானத்தைப் பொறுத்தவரை  மிகவும் சிறப்பு வாய்ந்த ஆண்டாகும். இந்த ஆண்டு  மூன்று சூப்பர் நிலவுகள், நான்கு சந்திர கிரகணங்கள் மற்றும் ஒரு புளூ மூன் உட்பட 13 முழு நிலவுகள் இருந்தன. மூன்று சூப்பர் நிலவுகள் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் காணப்பட்டன.

அடுத்த ப்ளூ மூன் வரும் ஆகஸ்ட் 31, 2023ல் தென்படும் என மும்பையில் உள்ள நேரு பிளானடோரியத்தின் இயக்குநர் அரவிந்த் பரஞ்பாயே தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *