‘தில் பெச்சாரா’ என்பது ஜான் க்ரீனின் பிரபலமான 2012 நாவலான ‘தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸின்’ இந்தி திரைப்படத் தழுவலாகும். உண்மையில், 2016 ஆம் ஆண்டில் அதே பெயருடன் புத்தகத்தின் ஹாலிவுட் தழுவல் மிகவும் விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றது.
இயக்குநர் முகேஷ் சப்ரா இயக்கத்தில்,ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சுஷாந்த் சிங் ராஜ்புத், சஞ்சனா சங்கி,சைஃப் அலி கான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகி, மரணத்தை எதிர்நோக்கியிருக்கும், ஓர் இளம்ஜோடிக்கு இடையில் துளிர்க்கும் காதலே இந்தத் திரைப்படம்.இம்மானுவேல் ராஜ்குமார் ஜூனியர் எனும் மன்னி (சுஷாந்த்) ஆஸ்டியோசர்கோமாவால் பாதிக்கப்பட்டவர் மற்றும் கிஸி பாசு (சஞ்சனா) தைராய்டு புற்றுநோய் பாதிப்புள்ளவர்.சுவாசிப்பதற்காக எப்போதும் ஆக்ஸிஜன் சிலிண்டரைச் சுமந்து செல்லும் கல்லூரி மாணவி கிஸி பாசு,ஒரு சாதாரண வாழ்க்கைக்காக ஏங்குகிறாள். அவர் படிக்கும் கல்லூரியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் படித்துப் பட்டம் பெற்றவர் மன்னி. புற்றுநோயிலிருந்து மீண்ட மன்னியை கல்லூரி விழாவின்போது சந்திக்கிறாள் கிஸி.
மகிழ்ச்சியான துறுதுறு இளைஞரான மேனியை பார்த்ததும் வெறுக்கும் கிஸிக்கு, மன்னியின் அன்பால் அவனை பிடித்து விடுகிறது.சோகமாய் இருக்கும் கிஸிக்கு சந்தோஷங்களை காட்டுகிறான் மன்னி. இருவரும் ஒருவரையொருவர் நேசிக்கத் தொடங்குகின்றனர்.இருவரில் ஒருவரை புற்றுநோய் விரைவிலேயே கொன்றுவிடும் என்று தெரிந்த பிறகும் மகிழ்ச்சியும் சோகமும் நிறைந்ததாக உள்ளது அவர்கள் வாழ்கை.புற்றுநோயின் தாக்குதலுக்கு மீண்டும் உள்ளாகும் மன்னி, கிஸிக்கு முன்பாகவே இறக்கிறான்.அவருடைய நினைவுகளைச் சுமந்தபடி கிஸி தொடர்ந்து பயணிப்பதாகப் படம் நிறைவடைகிறது.
சுஷாந்த் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகராக படம் முழுவதும் நடித்து இருக்கிறார். ‘சரி’ எனும் தமிழ் வசனம் படத்தில் முக்கிய இடத்தை பிடித்து இருக்கிறது. ஓகே என சொல்வதற்கு பதிலாக சரி என்ற தமிழ் சொல்லை நாயகிக்கு அறிமுகப்படுத்துகிறார்.
ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் பின்னணி இசை பாடல்கள் எல்லாமே ரசிக்கவைக்கின்றன.
உணர்வுகள் மேலோங்கி நம்மை கண் கலங்க வைத்தாலும் சுஷாந்த் சிங்கிற்காக நிச்சயம் இந்த படத்தை பார்த்து ரசிக்கலாம்.