விண்கல்லால் ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆனவர் !

அதிர்ஷ்டம் கூரையை பிச்சிகிட்டு வரும்னு சொல்றது, இங்க ஒருத்தர் வாழ்க்கையில நடந்து இருக்கு.யார் அந்த அதிர்ஷ்டக்காரர் என்று பார்ப்போம்.

இந்தோனேசியாவில் உள்ள வடக்கு சுமத்திராவில் இருப்பவர் ஜோஸுவா.33 வயதான இவர் சவப்பெட்டி செய்யும் தொழிலாளி.மூன்று குழந்தைகளின் தந்தையான இவருக்கு தான் இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது.கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்துள்ளது இது.

இது குறித்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, எங்களது வீடே நடுங்கும் படியான சத்தம் கேட்டது, என்னவென்று தேடி பார்த்தபோது தான் எங்கள் வீட்டின் கூரையை பிய்த்து கொண்டு ஏதோ ஒன்று விழுந்ததை நாங்கள் அறிந்தோம்.அந்த கல்லை எங்கள் கையால் முதலில் தொட்டு தூக்கும் போது அது வெப்பமாக இருந்தது.இது கண்டிப்பாக விண்கல்லாக தான் இருக்கும் என நாங்கள் நம்பினோம் என்று கூறியுள்ளார்.

ஜாரட் காலின்ஸ் என்னும் அமெரிக்க விண்கல் ஆராய்ச்சியாளர் இந்த கல்லை  வாங்கியுள்ளார்.Meteorite எனப்படும் இந்த விண்கல் 2.1 கிலோ எடையுடன் உள்ளது இந்த விண்கல்.மிகவும் பழமை வாய்ந்தது இந்த விண்கல். 4.5 பில்லயன் ஆண்டுகள் பழமையானது என்று சொல்லப்படுகிறது.CM1/2 carbonaceous Chondrite வகையை சேர்ந்த விண்கல் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதனால் ஒரே இரவில் 1.8 மில்லியன் டாலர் சம்பாதித்திருக்கிறார் இவர்.தனது தேவை போக மீதி உள்ள பணத்தை தனது கிராமத்துக்கு செலவு செய்யவுள்ளதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *