இறைவனுக்கு மட்டும் பொழிந்த மழை! சிதம்பரத்தில் என்றும் நடவாத ஒரு அதிசயம் !

ஆன்மீக பூமியான தமிழ்நாட்டில் பல கோவில்கள் உள்ளன.கோவில்கள் அனைத்தும் நமது மூதாதையர்களின் ஆன்மிகம், கலாச்சாரம், கட்டடக்கலையை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.அவற்றுள் சிதம்பரம் என்னும் வரலாற்று சிறப்புமிக்க ஊரில் இருக்கும் தளம் தில்லை நடராஜர் கோவில்.

சிதம்பரத்தில் இருக்கும் தில்லை நடராசர் கோயில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.நிலம் , நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய ஐந்து பஞ்சபூத தளங்களில் ஒன்றாக இது இருக்கிறது.ஆகாயத்திற்கான ஸ்தலமாக தில்லை நடராஜர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.மூலவராக திருமூலநாதர் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கிறார்.‘காஸ்மிக் டான்ஸ்’ என்று அறியப்படுகிறது நடராஜரின் தாண்டவம்.சிதம்பர நடராஜர் கோவில் பூமியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது,நடராஜரின் கால் பெருவிரலில் காந்த சக்தியின் மையப்பகுதி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்

சுவிட்சர்லாந்து நாட்டில் இருக்கும் CERN என்னும் ஆராய்ச்சி கூடத்தின் வாயிலில் நடராஜரின் சிலை வடிவம் வைக்கப்பட்டுள்ளது.பரதநாட்டிய கலை நடராஜரின் நடன அசைவுகளில் இருந்தே பெறப்பட்டதாக நம்பப்படுகிறது.சோழர் காலத்தில் தங்கத்தால் கூரை வேயப்பட்ட முதல் கோவிலாக தில்லை நடராஜர் கோவில் உள்ளது.

இப்படி பல சிறப்பு அமையப்பெற்ற கோவிலில் மேலும் சிறப்பு சேர்க்கும் வண்ணம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், சிவபெருமான் நடனமாடும் சிலையின் மீது மட்டும் மழை பெய்யும் காட்சி வைரலாகி வருகிறது.இது சூட்சமமாக வரும் சித்தர்களின் செயலாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *