முதல் பார்வை – பென்குவின் திரை விமர்சனம்

 

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரில்லர் படம் பென்குவின்.இப்படம்  தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரிக்கப்பட்டுள்ளது, மற்றும் மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இத்திரைப்படம் ஜூன் 19, 2020 அன்று நேரடியாக OTT இயங்குதளமான அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பப்பட்டது.

சொந்தபந்தம் யாரும் இல்லாத ரிதம், ரகுவை திருமணம் செய்து அஜய் என்னும் குழந்தையோடு சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்.அஜய்க்கு இரண்டு வயதாகும் போது அவன் காணாமல் போகிறான்.போலீஸ் அவன் இறந்து விட்டான் என்று கூறினாலும் ரிதமால் அதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.தனது மகனை இழந்து தவித்து கொண்டு இருக்கிறார். இதனால் கணவன் மனைவிக்கு இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிகின்றனர்.

ரிதம் தொடர்ந்து தனது மகனை தேடி கொண்டே இருக்கிறார்.இதனால் ஈர்க்கப்பட்ட கௌதம் ரிதமை நேசித்து அவரை மறுமணம் செய்கிறார்.அவர் மூலம் ரிதம் மீண்டும் தாயாகிறார்.இருந்தும் காணாமல் போன மகனையும் தேடி கொண்டே இருக்கிறார்.அவர் கனவிலும் அவரது மகன் அடிக்கடி வருகிறார்.

இந்த சூழ்நிலையில் ரிதமின் மகன் அவருக்கு திரும்ப கிடைக்கிறான்.ஆனால் அவனால் பேச இயலவில்லை.இதை கண்டு துடிக்கும் ரிதம்.அவனை கடத்தியது யார்,எதற்கு என்று விடை தேட முற்படுகிறார்.அவருக்கு உதவியாக வருகிறது அவரின் வளர்ப்பு நாய் சைரஸ்.

கடத்தியவர் யார், எதற்காக கடத்துகிறார் என்று அறியும் கதையே படத்தின் முடிவு.

முதல் பாதி சற்று மெதுவாக  செல்கிறது, இரண்டாவது பாதி விறுவிறுப்பாக செல்லும் என்று நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.திரில்லர் கதை என்றாலும் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு இல்லாமல் போகிறது கதைக்களம்.நாமளே யூகிக்க கூடியதாக உள்ளது.சிலபல காட்சிகள் வேறு படங்களை நினைவுக்கு கொண்டு வருகிறது.

 கீர்த்தி சுரேஷின் நடிப்பு பிரமாதம்.தாயாக அவரின் பரிதவிப்பு நம்மையும் பரிதாபப்பட வைக்கிறது.டாக்டராக வருபவரின் நடிப்பு கவர்க்கிறது.அதற்கு அடுத்ததாக அவரின் வளர்ப்பு நாய் சைரஸ் ன் நடிப்பு.மற்ற யாரின் நடிப்பும் ஈர்க்கவில்லை.அவரின் கணவராக வரும் இருவரும் தனக்கு தந்த வேலையை செய்துள்ளனர்.

படத்தின் நீளம் அதிகமாக உள்ளது.அதை சற்று குறைத்து இருந்திருக்கலாம்.படத்தின் விறுவிறுப்பை அது குறைக்கின்றது.

ஊட்டியின் அழகு, கடத்தலின் கொடூரத்தை ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி திறம்பட  காட்டியுள்ளார்.

சந்தோஷ் சிவனின் இசை திரில்லர் காட்சிகளுக்கு வலுசேர்த்துள்ளது.தாய்மையின் வலிமையை உணர்த்தியுள்ளார் இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக்.

பென்குவின் மனதை தொடவில்லை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *