கரகர மொறுமொறு சாத்தூர் சேவு

சாத்தூர் சேவு என்று அழைக்கப்படும் இந்த கரகரப்பான  சிற்றுண்டி சாத்தூர் என்னும் ஊரின் பிரபலமான நொறுக்கு தீனி வகையை சார்ந்தது.நறுமணமுள்ள, காரமான, மொறுமொறுப்பான,சுவையான சாத்தூர் ஸ்டைல் சேவு வீட்டிலேயே எளிமையாக செய்வது எப்படி என்று பார்ப்போம்.

இதற்கு தேவையான பொருட்கள் என்னவென்று கீழே பார்ப்போம்

கடலை மாவு – 1 கப்

அரிசி மாவு – 1/2  கப்

பூண்டு – 4 பல்

சீரகம் – 1 ஸ்பூன்

பெருங்காயம் – 1/2 ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தண்ணி – தேவையான அளவு

 

இப்போ எப்படி சேவு பண்றதுனு பாக்கலாம்

 

1 . ஒரு பாத்திரத்துல சலிச்ச அரிசி மாவு சேத்துக்கோங்க

2  . அதோட சலிச்ச கடலை  மாவும் சேத்துக்கணும்

3  . பூண்டு பல்ல தட்டி போட்டுக்கணும்,நிறைய பண்றதா இருந்த மிக்ஸி ல விழுதாக்கியும் சேத்துக்கலாம்.

4  . அதோட சீரகம் சேத்துக்கணும்.

5 . அடுத்ததா மிளகாய் தூள் சேக்கனும்(சாத்தூர் மிளகா ரொம்ப பிரபலமானது அந்த ஊர்ல, அந்த மிளகாயை வெயிலில் காய வச்சு கொரகொரப்பா அறச்சு சேத்தோம்னா ருசி அதிகம்).

6  . பெருங்காயம் சேர்க்கணும் அடுத்து.கட்டி பெருங்காயம் என்றல் தண்ணில கரைத்து சேக்கணும்,தூள் பெருங்காயம் என்றால் அப்படியே சேத்துக்கலாம்.

7  . கடைசியா தேவையான அளவு உப்பு சேர்க்கணும்.எல்லாம் சேர்த்து ஒரு தடவ கிளறி விடுங்க.

8 . இப்ப தேவையான அளவு தண்ணி சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

9  . பிசைந்த மாவை முறுக்கு உரல்ல முறுக்கு அச்சு போட்டு மாவை சேர்த்து கொள்ளவும்.சேவு பண்ற கரண்டி இருந்தா நீங்க அதுலயே செய்யலாம்.என்கிட்ட இப்ப அது இல்லை அதனால தான் நான் முறுக்கு உரல்ல பண்றேன்.

10 .எண்ணையை இரும்பு சட்டில காய வைக்கவும்.

11  .எண்ணெய் காய்ந்ததும் முறுக்கு மாதிரி பிழிஞ்சு விடணும்.வெந்ததும் எடுத்து ஆற வச்சு உடைச்சு வச்சா சேவு ரெடி.

சாத்தூர் சேவு செஞ்சு  டீ டைம் ஸ்னாக்ஸ் ஆ  தந்து அசத்துங்க உங்க வீட்ல உள்ளவர்களை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *