சூப்பர் ருசியான வெஜ் மோமோஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம். காரமான மிளகாய் சட்னியுடன் சூடாக பரிமாறவும்.அவற்றில் நிறைய காய்கறிகளும் சேர்க்கப்பட்டுள்ளன, இது மிகவும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
இதற்கு தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 1 கப்
சுவைக்க உப்பு
எண்ணெய் – 1 ஸ்பூன்
தேவைக்கேற்ப தண்ணீர்
பூரணம் செய்ய தேவையான பொருட்கள்
கேப்சிகம் – 1 நறுக்கியது
கேரட் – 1 நறுக்கியது
முட்டைக்கோஸ் – 1நறுக்கியது
பூண்டு – 6 பல் நறுக்கியது
வெங்காயம் – 1 நறுக்கியது
சர்க்கரை – 1 பின்ச்
சோயா சாஸ் – சுவைக்கு
கருப்பு மிளகு தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
மிளகாய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்
தக்காளி 2
மிளகாய் வத்தல் 4
பூண்டு பல் – 4
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
ஒரு பாத்திரத்துல கோதுமை மாவு எடுத்துக்கணும்.
அதற்கு தேவையான உப்பு
எண்ணெய் 1 ஸ்பூன் சேத்துக்கனும்
தேவையான அளவு தண்ணி சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
ஒரு தாவா ல எண்ணெய் சேர்த்து,வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கனும்.
நறுக்கிய கேப்சிகம் ,கேரட் ,முட்டைக்கோஸ் சேர்த்து வதக்கனும்.
ஒரு பின்ச் சர்க்கரை சேர்க்கணும்
ஒரு ஸ்பூன் சோயா சாஸ் சேர்த்து வதக்கனும்.எல்லாவற்றையும் 5 நிமிடங்கள் வதக்கவும்.
கடைசியா மிளகு தூள் சேர்க்க வேண்டும்.
இப்போது மாவின் ஒரு சிறிய பகுதியை எடுத்து, அதை மெல்லியதாக உருட்டவும்,சப்பாத்தி போன்று தேய்த்து , சிறிது பூரணம் நிரப்பவும்.
மோமோஸைப் போல வடிவமைக்க விளிம்புகளை மூடுங்கள்.
இப்போது அதை ஒரு நீராவி தட்டில் ஏற்பாடு செய்து 8 முதல் 10 நிமிடங்கள் வரை வேகா வைக்க வேண்டும்.
மிளகாய் சட்னி செய்முறை
தக்காளி,மிளகாய் வத்தலை தண்ணீரில் வேக வைக்கவும்
ஆறியதும் பூண்டு பல்,உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.மிளகாய் சட்னி தயார்.
காரமான மிளகாய் சட்னியுடன் மோமோஸ் ஐ பரிமாறவும்.